1889:
நவம்பர் திங்கள் 14ம்
நாள் மோதிலால் நேருவுக்கும் சொரூபராணிக்கும் மகனாக அலகாபாத்தில் பிறந்தார்.
1905:
மே திங்களில் இங்கிலாந்திலுள்ள
"ஹரோ" பள்ளியில் சேர்ந்தார்.
1907:
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.
1910:
பட்டப்படிப்பை முடித்து சட்டசபைத் தொடர்ந்தார்.
1912:
"பாரிஸ்டர்" பட்டம் பெற்று இந்தியா
திரும்பினார்.
1915:
காங்கிரஸ் மாநாட்டில் மேடையேறி உரையாற்றினார்.
1916:
பிப்ரவரி திங்கள் 8ம் நாள் கமலாவை
திருமணம் செய்து கொண்டார்.
டிசம்பர் டின்களில் முதல் முதலாக மகாத்மா
காந்தியடிகளை லக்னோ காங்கிரஸ் மாநாட்டில்
சந்தித்தார்.
1917:
நவம்பர் 19: இந்திராகாந்தி பிறந்தார்.
1919:
தந்தை மோதிலால் நேருவுடன்
இணைந்து "இண்டிபெண்டெண்ட்" என்ற செய்திப் பத்திரிகையைத்
தொடங்கினார்.
1921:
விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டார். வேல்ஸ் இளவரசர் வருகையையொட்டி
கடையடைப்பு செய்ய திட்டமிட்டார் என்று
டிசம்பர் 6ம் நாள் கைது
செய்யப்பட்டு 6 மாதம் சிறைத்தண்டனை அடைந்தார்.
1925:
அலகாபாத் நகராட்சி தலைவரானார். பின்னர் அப்பதிவியையும் துறந்தார்.
1927:
நவம்பர் திங்கள் மொஸ்கோவில்
நடைபெற்ற ரஷ்யப்புரட்சி தினவிழாவில் கலந்து கொண்டார். "சோவியத்
ரஷ்யா" என்ற நூலை எழுதினார்.
டிசம்பரில் சென்னையில் நடந்த 42வது காங்கிரஸ்
மாநாட்டில் பங்கு கொண்டார்.
1930:
ஏப்ரல் 14ம் நாள் உப்பு
சத்யகர்க்கத்தில் ஈடுபட்டு 4 மாத காலம் சிறைத்தண்டனை
பெற்றார்.
சிறையிலிருந்து "உலக வரலாறு" எழுதத்
தொடங்கினர்.
1931:
தந்தை மோதிலால் நேரு
மறைந்தார்.
1934:
"உலக வரலாறு" நூலை
எழுதி முடித்தார்.
1935:
பிப்ரவரியில் தமது சுயசரிதையை எழுத்த
தொடங்கினர்.
செப்டம்பர் 4ம் மால் மனைவி
கமலா உடல் நலம் பாதிக்கப்பட்டதால்
விடுதலை பெற்று ஐரோப்பா சென்றார்.
வெளிநாட்டிலிருக்கும் போதே காங்கிரஸ் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1936:
பிப்ரவரி 28ம் நாள் கமலா
ஸ்விட்சர்லாந்தில் காலமானார்.
ஜூன்
2ம் நாள் இந்திய அரசியல்
சட்டத்தின் மாதிரியை உருவாக்கினார்.
1938:
அன்னை சொரூபா ராணி
மறைந்தார்.
1939:
மகாத்மா காந்திக்கு - சுபாஷுச்சந்திரபோசுக்குமிடையே
ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைப் போக்க
முயற்சித்தார்.
1940:
வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து நடந்த
சத்யாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக அக்டோபர்
31ம் நாள் கைது செய்யப்பட்டு
இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
1941:
டிசம்பரில் விடுதலை செய்யப்பட்டார்.
1942:
ஜனவரி 1ம் நாள்
'நேருவே என் வாரீசு' என்று
மகாத்மா காந்தியடிகளால் புகழப்பட்டார்.
ஆகஸ்ட் 7ம் நாள்
பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை முன்மொழிந்தார். அடுத்த நாளே கைது
செய்யப்பட்டார். நீண்டகாலம் சிறை வைக்கப்பட்டார்.
1944:
ஏப்ரல் 13ம் நாள் "இந்தியாவின்
கண்டுபிடிப்பு" என்ற நூலை எழுதத்
தொடங்கினர்.
செப்டம்பரில் இந்நூல் முடிந்தது.
1945:
ஜூலை 17ல் பாகிஸ்தான்
பிரிவினையை வன்மையாகக் கண்டித்தார். பொதுத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்துக் கடுமையாக உழைத்தார்.
1946:
"இந்தியாவின் கண்டுபிடிப்பு" நூலை வெளியிட்டார்.
ஆகஸ்ட் 12ம் நாள் இடைக்கால
அரசு அமைக்கப்பட வேண்டும் என்று வைசிராயிடம் நேரு
வலியுறுத்தினார்.
1947:
ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரமடைந்தது. இந்தியாவின்
முதல் தலைமை அமைச்சரானார்.
1948:
ஜனவரி 30 காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். நேரு வானொலியில் உருக்கமாக
உரையாற்றினார்.
ஆகஸ்ட் 20 அணுசக்தி குழுவின் முதல் கூட்டத்தை துவக்கிவைத்தார்.
1950:
ஜனவரி 26 இந்தியா குடியரசு நாடகப்
பிரகடனப் படுத்தினார்.
மார்ச்சில் இந்தியத் திட்டக் குழுவைத் தொடங்கி
வைத்தார்.
ஜூலை 14ல் கொரியப்பொறை
நிறுத்துமாறு வல்லரசு நாடுகளுக்கு வேண்டுகோள்
விடுத்தார்.
1954:
ஜூன் 25 சீனப்பிரதமர் சூ
எனலாவை வரவேற்றார்.
பஞ்சசீலக் கொள்கையை அறிவித்தார்.
1955:
ஜூலை 15 "பாரதரத்னா" விருது பெற்றார்.
1957:
ஜனவரி நளந்தாவில் புதபகவானின்
2500வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.
1962:
டிசம்பர்ரில் கோவாவை போர்ச்சுகீசியர் பிடியிலிருந்து
விடுதலை பெறச் செய்தார்.
1964:
ஜனவரி புவனேசுவரம் காங்கிரஸ்
மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது நோய் வாய்ப்பட்டார்.
மே 27 புதன் காலை
6.20 மணிக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
பகல் 2.00 மணிக்கு உயிர் துறந்தார்.
No comments:
Post a Comment